சாலைகளில் கூட்டமாக மக்கள்.. கொரோனவை மறந்து விட்டார்களா…?

Scroll Down To Discover

தமிழகத்தில் நாளை முதல் தளர்வில்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்தனர். இறைச்சி கடைகள் மற்றும் மீன் வாங்கவும் கூட்டமாக குவிந்தனர். பலர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் நாளை முதல் எந்த தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக நேற்றும், இன்றும் காய்கறி, மளிகை கடைகள் இரவு 9:00 மணி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால், இன்று அனைத்து மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிகடைகள் மீன் சந்தைகள் திறக்கப்பட்டன. இதனால், பொது மக்கள் ஒரே நேரத்தில் அங்கு குவிந்தனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காய்கறி மார்க்கெட்டிலும் பஸ்நிலையம் அருகில் பொதுமக்கள் பெருந்திரளாக கூடிய காட்சிகள் கொரானாவால் மிகவும் பாதிக்கப்பட்ட கோவில்பட்டி நகரில் இதுபோல் கூட்டம் ஏற்பட்டநிலையில் மேலும் பலமடங்கு கொரோனா தொற்றுகள் மிக அதிகரிக்கும் ஏராளமானோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் குவிந்தனர்.

தூத்துக்குடி : ப.பரமசிவம்