இந்தியாவிலிருந்து மேலும் 4 ஈரநிலங்கள், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
குஜராத்தின் தொல் மற்றும் வத்வானா, ஹரியானாவின் சுல்தான்பூர் மற்றும் பிந்தாவாஸ் ஆகிய தலங்கள் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
https://twitter.com/byadavbjp/status/1426232561341108225?s=20
இந்தத் தகவலை தமது சுட்டுரைச் செய்தியில் வெளியிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ், இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டதற்கு தமது மகிழ்ச்சியை தெரிவித்திருப்பதுடன் சுற்றுச்சூழலின் ஒட்டுமொத்த மேம்பாட்டின் மீது பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள சிறப்பு அக்கறையின் காரணமாக ஈரநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறினார்.
இந்த 4 பகுதிகளுடன், இந்தியாவின் மொத்த ஈரநிலங்களின் எண்ணிக்கை 46 ஆகவும், மொத்த பரப்பளவு 1,083,322 ஹெக்டேராகவும் உள்ளது.
Leave your comments here...