சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

Scroll Down To Discover

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என பாத்திமா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது :-சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது. கோயிலுக்குள் காவல்துறை நிறுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இப்போதுள்ள சூழலில் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தவிட முடியாது. இவ்வழக்கை தொடர்ந்த மூன்று பெண்களுக்கும் ஏற்கெனவே பாதுகாப்பு உத்தரவு இருக்கிறது. சபரிமலை மறு சீராய்வு மனுக்களை விரைவில் விசாரிக்கப்படும்” என தெரிவித்தனர்.