சந்திரயான் 3 வெற்றி பெற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு..!

Scroll Down To Discover

சந்திரயான் 3 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் மாடலை வைத்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து நாளை பிற்பகல் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ள நிலையில், மதியம் 1.05 மணிக்கு கவுண்ட் டவுன் தொடங்கியது.

இந்த நிலையில் சந்திரயான் -3 திட்டம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் சந்திரயான் 3-ன் மாதிரியை கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.

பின்னர் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியா தனது 3வது நிலவு பயணமான ‘சந்திராயன்-3’ நாளை பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் செலுத்த உள்ளது. எல்லாம் நன்றாக நடக்க வேண்டும். ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் நிலவில் தரையிறங்கவும் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.