சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசின் தீவிர நடவடிக்கைகளால் பல நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு திருந்தி வாழத்தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள மொர்பள்ளி பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து மாநில போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 8 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நக்சலைட்டுகளிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Leave your comments here...