விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு இன்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மட்டும் என, மாதத்தில் 8 நாட்களுக்கு மட்டுமே சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஐப்பசி தேய்பிறை பிரதோஷம் நாளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் காரணத்தால் நேற்று சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தாணிப்பாறை நுழைவுப் பாதையில் காத்திருந்த 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இன்றும் காலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலைக்குச் செல்வதற்காக காத்திருக்கும் நிலையில், மழையின் காரணமாக இன்றும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என வனத்துறையினர் கூறினர்.
இதனால் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வனத்துறை அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கையில் சில பக்தர்கள், தாணிப்பாறையில் காத்திருக்கின்றனர்.
Leave your comments here...