கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் இடமாற்றம்

Scroll Down To Discover

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் காவல் ஆணையர் சுமித்சரண் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் மீது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பிய உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி, போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்படுகின்றனர். கலெக்டராக நாகராஜனும், போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதமும் நியமிக்கப்படுகின்றனர். ஆணையத்திற்கு வந்த பல புகார்கள் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.