கோவை மாநகரில் பிள்ளையார் கோயில் அம்மன் கோயில் மீது தாக்குதல் – அர்ஜுன் சம்பத் கண்டனம்..!

Scroll Down To Discover

கோவை மாநகரில் பிள்ளையார் கோயில் அம்மன் கோயில் அவமதிப்பு செய்ததை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் முகநூலில் பதிவில் :- கோவை மாநகரில் இரண்டு திருக்கோயில்களின் மீது சமூக விரோதிகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளார்கள். கோயிலை அவமானப்படுத்தி உள்ளார்கள். ரயில்நிலையம் அருகாமையில் உள்ள பிள்ளையார் கோயில், கோவை உக்கடம் அருகாமையிலுள்ள அம்மன் கோவில் ஆகியவை அவமானப் படுத்தப் பட்டுள்ளது. அனைவருக்கும் வேதனையை கொடுக்கிறது. அதிர்ச்சி அளிக்கின்றது.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று ஈவேரா சிலை அவமதிப்பு விஷயத்தில் கண்டன அறிக்கை கொடுத்த அரசியல் கட்சிகள் மவுனம் சாதிப்பது மிகவும் வேதனையாக உள்ளது. அமைதிப் பூங்காவான கோவை மாநகரத்தில் மதரீதியான பதட்டத்தை உருவாக்கும் உள்நோக்கத்துடன் இந்த செயல்கள் நடைபெற்றுள்ளதாக சந்தேகிக்கிறோம்.

மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு கோவை மாநகர இந்து கோயில்களுக்கு பாதுகாப்பும் நீதியும் வழங்கிட வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கையை முன்வைக்கின்றேன். ஹிந்து கோவில்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.