கோவை மாணவி மரணம் : சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது – முதல்வர் ஸ்டாலின்

Scroll Down To Discover

கோவை உக்கடம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வியாழக்கிழமை மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி முதலில் படித்த சின்மயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி, தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் முதற்கட்டமாக இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரை பிடிக்க இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவை பகுதியில் இச்சம்பவத்தை கண்டித்து மாணவர்களும், பெண்கள் அமைப்பும், பொது மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை மாணவியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,


இந்நிலையில், கோவை மாணவியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதிசெய்யவேண்டும். குற்றவாளிகளை கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.