கோவை அரசு கலைக்கல்லூரியில் விவேகானந்தர் படத்தை வரைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன்..? விளக்கம் கேட்கும் பிரதமர் அலுவலகம்..!

Scroll Down To Discover

கடந்த ஆண்டு கோவை அரசு கலைக்கல்லூரியின் சுவற்றில் பெரியார் கல்மார்க்ஸ் ஓவியம் வரைய பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஒரு மாணவர் இளைஞர்களின் வழிகாட்டி வீர துறவி சுவாமி விவேகானந்தர் ஓவியத்தை வரைந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி நிர்வாகம் அவரிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து விவேகானந்தர் ஓவியம் வரைந்த மாணவனை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறப்பட்டது. இதனை கண்டித்து இந்து முன்னணியின் மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.


இதனால் வருத்தம் அடைந்த மாணவர் கணேஷ் இதுபற்றி  பிரதமர் அலுவலகத்திற்கு புகார் கடிதம் அனுப்பினார். அதன்பேரில் கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு, பிரதமர் அலுவலகம் தற்போது கடிதம் அனுப்பியுள்ளது.