கோயம்புத்தூரில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் பெரியார் சிலை மீது கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவர் காவிச் சாயம் கொட்டினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைவர்கள் அனைவரும் இந்தச் சம்பவத்துக்கு கண்டனத்தைத் தெரிவித்தனர். அதனையடுத்து, காவிச்சாயத்தை ஊற்றிய பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்ற இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
இந்தநிலையில், கோயம்புத்தூரில் டவுன்ஹால் ரோடு மாகாளியம்மன் கோவில் பகுதியில் கோவில் முன்பாக டயர்கள் வீசப்பட்டன; திரிசூலம் வளைக்கப்பட்டது என செய்திகள் வெளியாகின. இந்த காலித்தனத்தை செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.இதேபோல் நல்லாம்பாளையத்தில் கோவில் பொருட்கள் எரிக்கப்பட்டன. இப்படி கோவையில் மொத்தம் 3 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது.
பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை @CMOTamilNadu உறுதி செய்ய வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) July 19, 2020
கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது.
பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை @CMOTamilNadu உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக கந்தசஷ்டி கவச விவகாரம் தொடர்பாக அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் கருப்பர் கூட்டம் விவகாரத்தில் அமைதி காக்கும் காரணமென்ன..? அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave your comments here...