கோயில் உண்டியல் திருட்டு : சிசிடிவியில் சிக்கிய திருடன் : போலீசார் விசாரணை..!

Scroll Down To Discover

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில், மிகவும் பிரசித்திபெற்ற வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இன்று காலை வழக்கம்போல் கோவிலை திறப்பதற்காக கோவில் பூசாரி பாலசுப்பிரமணியம் கோவிலுக்கு காலை வந்துள்ளார்.

இந்த நிலையில், கோவிலில் உள்ள உண்டியல் இருந்த இடம் சேதமடைந்து உண்டியலை கானாமல் போனதை உணர்ந்த பாலசுப்பிரமணியம், உடனே சம்பவம் குறித்து, மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசாரிடம், மற்றும் கோவில் அறங்காவலர் கார்த்திகேயன் ஆகியோர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து காணாமல் போன உண்டியல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை தனி ஆளாக சுமந்து கொண்டு செல்லும் காட்சி அந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அடிப்படையில், போலீசார் உண்டியலை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மேலும், பிரசித்திபெற்ற கோவிலில் உண்டியல் நள்ளிரவில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.