கோயில்களை திறக்கக்கோரி அகில பாரத இந்து சேனா ஆர்ப்பாட்டம்.!

Scroll Down To Discover

கோயில்களை திறக்கக்கோரி அகில பாரத இந்து சேனா சார்பில் மதுரை அருகே திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்தில், ஒரு பெண் உள்பட 17 பேர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அகில பாரத இந்து சேனா சார்பில் இந்து கோயில்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விதிமுறைகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்தது போல், சமூக இடைவெளியுடன் கூடிய விதிமுறைகளுடன் கோயில்களை திறக்கக்கோரி, ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் , மதுரை மாவட்ட தலைவர் நாராயணன் மண்டலத் தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட 17 பேர் கலந்து கொண்டனர்.