சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதியாகியுள்ளது. ஒருவர் ஒருவர் என, இங்கு கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் என 38 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்துவிட்டு அரியலூருக்கு திரும்பிய 19 தொழிலாளர்கள் மற்றும் பெரம்பலூர் திரும்பிய ஒரு தொழிலாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.அதேபோல், கோயம்பேட்டில் இருந்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரும்பிய 7 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், சிதம்பரம் அண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னை, திருவல்லிக்கேணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...