கோமாரி நோய் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

Scroll Down To Discover

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கோமாரி நோய் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோமாரி நோய் தடுப்பூசி தொடர்பாக மத்திய கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் கோமாரி நோய் மற்றும் கன்றுவீச்சு நோய்க்கு கடந்த செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதையும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பையும் தடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.