சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கோட்டையூரில் பொதுமக்கள் மற்றும் காவல் துறைக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக கிராமப்புறம் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் இன்று நடைபெற்றது.
ஒவ்வொரு ஊராட்சியிலும் தாய் கிராமத்தை தேர்ந்தெடுத்து அதற்கென ஒரு காவலரை நியமித்து, சுற்றியுள்ள கிராமங்களில் நடக்கும் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கென தீர்வு அமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட இந்த கிராமப்புற காவலர் திட்டத்தைப் பற்றி காவல் துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
காவல்துறை துணை தலைவர் என்.எம். மயில்வாகனன் ஐபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முரளிதரன் சிவகங்கை காவல்துறை துணைகண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் இளையான்குடி காவல்துறை ஆய்வாளர் பரணிதரன், சார்பு ஆய்வாளர் மாணிக்கம் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர்.
Leave your comments here...