கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு.! தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் சுத்தமான கங்கை ஆறு..!!!

Scroll Down To Discover

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது.கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசும் எச்சரித்து வருகிறது. ஊரடங்கு தடை உத்தரவை மீறியும் சிலர் அலட்சியமாக செயல்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,3072ல் இருந்து 3,374 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 75ல் இருந்து 77 ஆகவும் அதிகரித்துள்ளது. 267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இதனால், பெரும்பாலான சாலைகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.இதையடுத்து, காற்று மாசு, பெருமளவு குறைந்து காணப்படுகிறது.வாகன போக்குவரத்து இல்லாமல், டில்லி உள்ளிட்ட, 90 நகரங்களில் காற்று மாசு, பெருமளவு குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், கங்கை, யமுனை ஆறுகளின் கரைகளில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அவற்றில் இருந்து கழிவுகள் வெளியேறி ஆற்றில் கலப்பது முற்றிலும் நின்றுபோனது. இதனால் கான்பூரில் கங்கையாற்று நீரின் தரம் முன்பைவிட 50 விழுக்காடு அளவுக்கு மேம்பட்டுள்ளதாக இது குறித்து ஆய்வு மேற்கொண்ட வாரணாசி ஐஐடியின் பேராசிரியர் பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.