கொரோனா வைரஸ் சீனாவிற்கு ஆதரவு : உலக சுகாதார அமைப்பிற்கு ரூ. 3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தியதாக தகவல்..!

Scroll Down To Discover

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்தது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதி அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள், திரை அரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.பின்னர் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாய் மக்கள் பலியாகி வருகின்றனர்.கடந்த வாரம் அதிபர் டிரம்ப் பேசுகையில், உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா பெருந்தொகையை செலுத்தி வருகிறது. ஆனால் அந்த அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே உலக சுகாதார அமைப்பு அளிக்கப்படும் நிதியை நிறுத்த உள்ளதாக கூறினார்.

பின்னர் டிரம்ப்பின் பேட்டியை அறிந்த உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதனோம், தயவுசெய்து கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். கொரோனாவிலிருந்து அரசியலை தனிமைப்படுத்துங்கள். ஆபத்தான வைரசை வீழ்த்த ஒற்றுமை மிக முக்கியம் என எச்சரித்தார்.


இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் உலக சுகதார அமைப்பு சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் தகவல்களைப் பெறவும், கண்காணிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தவறிவிட்டது முன்னரே அறிவித்த படி உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதால் எனது அரசு நிர்வாகம் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படுகிறது. முதற்கட்டமாக உலக சுகாதார அமைப்பிற்கு ரூ. 3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.