கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்காற்று நிவாரணங்களைப் பெறுவதில் வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பல்வேறு நிவாரணச் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
2021 மே 1 தேதியிடப்பட்டு, இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
1. வட்டி விகிதம் குறைப்பு:
தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு ஆண்டுக்கு 18 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்திற்கு பதிலாக, ரூ. 5 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் பதிவு செய்யப்பட்ட நபர்கள், ரூ. 5 கோடி வரை வருமானம் ஈட்டும் நபர்கள், கலவைத் திட்டத்தின் கீழ் வரி செலுத்த விருப்பம் தெரிவித்துள்ள நபர்கள் ஆகிய பிரிவினருக்கு தனித்தனியே சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2. தாமதமாக வரி செலுத்துவோருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
3. ஜிஎஸ்டிஆர்-1, ஐஎஃப்எஃப், ஜிஎஸ்டிஆர்-4, ஐடிசி-04 ஆகிய படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கான தேதிகள் நீட்டிப்பு:
ஏப்ரல் மாதத்திற்கான (மே மாதத்தில் வரவிருக்கும் ஜிஎஸ்டிஆர்-1 மற்றும் ஐஎஃப்எஃப் படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டிஆர்-4 படிவத்தைத் தாக்கல் செய்வதற்கான தேதி, ஏப்ரல் 30 முதல் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது2021 ஜனவரி – மார்ச் மாத காலாண்டிற்கான ஐடிசி-04 படிவத்தை வழங்குவதற்கான இறுதி தேதி ஏப்ரல் 25 முதல் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
Leave your comments here...