கொரோனா பாதிப்பு : அழகர் கோவில் திருக்கல்யாணத்தை நேரில் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை.!

Scroll Down To Discover

அழகர்கோவிலில் அருள்பாலிக்கும் கள்ளழகரின் திருக்கல்யாண வைபவத்தை ஆன்லைனின் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பங்குனி உத்திர நாளில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத, கள்ளழகர் திருக்கல்யாணம் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக அழகரின் திருக்கல்யாணத்தை பக்தர்கள் ஆன்லைனின் கண்டு தரிசிக்க அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத, கள்ளழகருக்கு பங்குனி உத்திர நாளில் திருக்கல்யாணம் நடைபெறும்.

திருக்கல்யாண திருவிழா நாளை 28-ஆம் தேதி பங்குனி உத்திர நாளில் நடைபெறுகிறது.

29ஆம் தேதி மஞ்சள் நீர் சாற்று முறையுடன் திருக்கல்யாண திருவிழா நிறைவடைகிறது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே கள்ளழகர் திருக்கல்யாணத்தை கோவில் இணையதளத்தில் http://alagarkoil.org/ கண்டு தரிசனம் செய்யுமாறு அறநிலையத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது