கொரோனா பாதிப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி உயிரிழப்பு..!

Scroll Down To Discover

சென்னையில் கொரோனா தொற்று காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஐ. குருமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த குருமூர்த்தி (55 வயது) சென்னை மேற்குத் தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். அயல்பணியாக மீனம்பாக்கம் காவல்நிலைய ரோந்து பணி பொறுப்பாளராக இருந்தபோது கொரோனா உறுதியானது. அதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) குருமூர்த்தி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

எஸ்.ஐ. குருமூர்த்தி மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறையில் போலீசார் உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது