கொரோனா பரவல் – சர்வதேச பயணிகள் விமான சேவை இந்தியாவில் ஏப்ரல் 30 வரை ரத்து

Scroll Down To Discover

கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. அதேசமயம் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.