கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது – பிரதமர் மோடி

Scroll Down To Discover

பாஜகவின் 40-வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. கரோனா தடுப்பில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது என்றும் தெரிவித்தார். நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் ஒற்றுமையை நேற்று இரவு 9 மணிக்கு அனைவருமே பார்த்தோம். இது ஒரு நீண்ட போராக இருக்கலாம். ஆனால் அதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது.


கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளை ஒருங்கிணைந்து மத்திய அரசு செயல்படுகிறது. ஊரடங்கு உத்தரவை மக்கள் இவ்வளவு தீவிரமாகக் கடைப்பிடிப்பார்கள் என்று ஒருவருமே கற்பனை கூட செய்து பார்திருக்க மாட்டார்கள் என்றும் மோடி தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிராக உணர்வுப்பூர்வமாக மக்கள் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும். இந்திய மக்கள் ஒன்றாக இணைந்து கொரோனா நோயை தோற்கடிப்பார்கள். இவ்வாறு மோடி பேசினார்.