கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சிறப்பு ஊக்கப் பரிசு.!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தமிழக அரசின் 15-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதில் காரியாபட்டி வட்டாட்சியர் தனக்குமார், மற்றும் கல்குறிச்சி காரியாபட்டி மல்லாங்கினறு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மையங்களில் நடைபெற்ற முகாம்களை, பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காரியாபட்டி அமலா பள்ளியில் நடைபெற்ற முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு காரியாபட்டி எஸ்.பி.எம்.டிரஸ்ட் சார்பாக ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரூபன் ராஜ், டாக்டர்.நிரஞ்சனா, வட்டார சுகாதார ஆய்வாளர் கருப்பையா, எஸ்.பி.எம். அறக்கட்டளை நிறுவனர் எம். அழகர்சாமி, கிராம நிர்வாக அலுவலர் காசிமாயன், கிராம உதவியாளர் சுரேஷ் பலர் பங்கேற்றனர்.

இது குறித்து எஸ்.பி.எம்.டிரஸ்ட் நிறுவனர் கூறும்போது: தமிழக அரசின் சார்பாக, இதுவரை காரியாபட்டியில் நடைபெற்ற 15 சிறப்பு கொரோனா தடுப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஊக்கப்படுத்துவதற்காக சிறப்பு பரிசுகள் வழங்கி வருகிறோம்.

கொரோனா தடுப்புக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் அனைத்து நோய்தடுப்பு திட்டங்களை காரியாபட்டி வட்டாரத்தில் முழுமையாக நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.