கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினால் பொதுமுடக்கம் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் நடமாட்டத்துக்கு முழுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பயணத்தடைகள் விதிப்பது போன்ற அணுகுமுறைகளால், நோயை கட்டுப்படுத்துவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்கள் மற்றும் வாழ்வாதாரம் என இரண்டையும் பாதுகாப்பது அவசியம் என்பதால், தொற்று பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதைய சூழலில், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றினாலேயே பொதுமுடக்கம் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோட்ரிகோ எச்.ஆப்ரின் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...