கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன், இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் பரவலாக கொரோனா தொற்று பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நாளொன்றுக்கு ஏற்பட்ட தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலை தற்போது 13 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது.தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.
சென்னை, தலைமை செயலகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியே, ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் மற்றும் துறை செயலர்கள், மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
தற்போதைய தொற்றின் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்வதற்காகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட கலெக்டர்கள்
ஆலோசனை கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் கொரோனா தொற்றின் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார்.
குறிப்பாக தொற்று பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களின் நிலவரத்தை அறிந்துகொள்வதில் அவர் ஆர்வம் காட்டுவார் என்று கூறப்படுகிறது. அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்குகிறார்.
Leave your comments here...