கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநிலங்களுக்கு உதவ ராணுவம் தயார் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Scroll Down To Discover

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
https://twitter.com/rajnathsingh/status/1384471803972575238?s=19
இந்நிலையில் கொரோனா 2வது அலையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் செயலாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி ராணுவ அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநில அரசுகளுடன் ராணுவ உயரதிகாரிகள் பேசியுள்ளனர்.மேலும் மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முப்படைகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருவதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநில அரசுகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரும்படி டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட ராணுவ பொதுத்துறை நிறுவனங்களுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.