கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை – மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா.? சுகாதாரத் துறை விளக்கம்

Scroll Down To Discover

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுஇடங்களில் முக கவசம் அணிவது தனிநபர் இடைவெளியை கட்டாயம் பின்பற்றுவது என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் ஏதேனும் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நாளை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, சுகாதாரத்துறை தரப்பில், ‘தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனப் பரவும் செய்தியில் உண்மை இல்லை. தேர்தலுக்குப் பிறகு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவுவது வதந்தியே. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். ஆனால் முழு ஊரடங்கு அறிவிக்கப்படாது. அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,’ என விளக்கம் அளித்துள்ளது.