ஒடிசா மாநிலத்தின் கடற்கரையோர நகரான புரியில் அமைந்துள்ள ஜெகன்னாதர் கோவிலில் ரத யாத்திரை திருவிழா ஆண்டுதோறும் 9 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.ஜெகன்னாதர் ஆலயத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கண்டிச்சா ஆலயம் வரை தேரோட்டம் நடைப்பெறும் இதில், பங்கேற்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் . அவர்கள்” மேளதாளங்களுடன் “ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா”…. “ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே என்ற பக்தி கோஷங்கள் எழுப்பியபடி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இந்த ஆண்டின் ரத யாத்திரை வருகிற 23-ந்தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவை கொரோனா தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.இதையடுத்து தேரோட்டத்தை தள்ளி வைக்குமாறு ஒடிசா விகாஸ் பரிசத் என்ற பொது நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள்:- ரத யாத்திரைக்கு நாங்கள் அனுமதி அளித்தால், கடவுள் ஜெகன்நாதரே எங்களை மன்னிக்க மாட்டார். தொற்று நோய் பரவல் சமயத்தில் இதுபோன்ற கூட்டங்கள் நடக்க அனுமதிக்க முடியாது. மோசமான தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். நெரிசலான சூழலில் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும்.மக்களின் நலன் கருதி இந்த ரத யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Leave your comments here...