உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 1.7 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6.8 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பரவல் அதிகரித்து வரும் சூழலில், இந்த வைரஸுக்கு தடுப்பூசி கண்டறியும் பணி, பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. மேலும், வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும்,” என, உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உலக நாடுகள் நுாறாண்டுக்கு ஒரு முறை, வரலாறு கானாத சுகாதாரப் பிரச்னையை சந்திக்கின்றன. கடந்த, 1918ல், ‘ஸ்பானிஷ் புளு’ பல கோடி மக்களை மாய்த்தது. தற்போது, கொரோனா வைரஸ், 1.80 கோடிக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. உயிரிழப்பு, 6.80 லட்சத்தை தாண்டியுள்ளது.அத்துடன் உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம், 10 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கும்.உலக சுகாதார அமைப்பு, கடந்த, ஜன.,30ல், கொரோனா நோய் தொற்று குறித்து, உலக நாடுகளுக்கு பொது சுகாதார அவசர எச்சரிக்கை விடுத்தது. அப்போது, சீனாவில் மட்டும் தான் கொரோனா பரவியிருந்தது. அதன் பின், அதன் பரவல் வேகமும், பாதிப்பும் எண்ணிப் பார்க்க முடியாதபடி உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
Leave your comments here...