கொட்டும் மழையில் நடந்த ‘செம்பருத்தி’ ஷபானா திருமணம்… ‘பாக்கியலட்சுமி’ ஆர்யனை கரம்பிடித்தார்!

Scroll Down To Discover

ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் ஷபானா. ‘பாக்கியலட்சுமி’ தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்யனை ஷபானா காதலிப்பதாக சமீபத்தில் இருவரும் அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்தனர்.

இந்நிலையில், இன்று (11ம் தேதி) அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இன்று காலை ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், “வேலைக்காக சென்னைக்கு வந்தேன்.. சென்னையில் செட்டில் ஆவேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. சீரியல் முடிச்சிட்டு மறுபடி ஊருக்கு போகணும்னு தான் நான் முடிவு பண்ணியிருந்தேன்.

ஆனா, கடவுளோட திட்டம்.. நான் சென்னையிலேயே செட்டில் ஆகுற மாதிரி ஆகிடுச்சு. நீங்க எல்லாரும் எப்ப கல்யாணம்னு கேட்டுட்டே இருந்தீங்க.. அதுக்காகத்தான் இந்த வீடியோ.. இன்னைக்கு எனக்கு கல்யாணம்.. உங்க எல்லோரோட வாழ்த்தும் எனக்கு தேவை” எனத் தெரிவித்துள்ளார்.