கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை – தமிழக அரசு உத்தரவு

Scroll Down To Discover

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமின்றியும், உரிய வாடகை செலுத்தாமலும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோயில் சொத்துகளை சட்டப்படியான உரிமையின்றி அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தனிநபர்கள் தரப்பில் காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகார்களுக்கு தேவையான ஆவணங்களையும் கோயில் நிர்வாகிகள் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.