கேரள தங்க கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு ஜாமின் கிடைத்தும் வெளியே வரமுடியாத : ஏன் தெரியுமா?

Scroll Down To Discover

கேரளாவைச் சேர்ந்த சிலர், மேற்கு ஆசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரில், தங்க கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வழக்கில், திருனந்தபுரத்தில் செயல்படும், யு.ஏ.இ., தூதரகத்தின் முன்னாள் ஊழியரான, ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று சுங்கத்துறையின் வழக்கில் ஸ்வப்னாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 60 நாட்கள் கடந்தும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்ந்துள்ள, பயங்கரவாதிகளுக்கு உதவ முயன்றது தொடர்பான வழக்கில், ஸ்வப்னா சிறையில் உள்ளார். அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள, பண மோசடி வழக்கிலும், அவருக்கான நீதிமன்ற காவல் தொடர்கிறது.இதனால், ஜாமின் கிடைத்தாலும், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்