கேரள தங்க கடத்தல் வழக்கில், ஸ்வப்னாவின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி நீதிமன்றம்.!

Scroll Down To Discover

கேரள திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு, துபாயில் இருந்து வந்த பார்சலில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார், சவுமியா, ரமீஸ், சிவசங்கர் ஆகியோரை கைது செய்தனர். இவர்களை காவலில் எடுத்த அமலாக்கத்துறை, தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஸ்வப்னாவின் ஜாமின் மனுவை கொச்சி நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில், அவரது ஜாமின் மனு மீதான விசாரணை, எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் கருப்பு பணம் இருந்ததற்கு ஆதாரம் உள்ளது என தெரிவித்த நீதிபதிகள், ஸ்வப்னாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தன.