கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்.!

Scroll Down To Discover

மலையாள வருட பிறப்பு மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10ம் தேதி நடைதிறக்கபட்டடுள்ளது.

சபரிமலையில் நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தினந்தோறும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனையடுத்து நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்த சான்றிதழ் மிகவும் அவசியம்.

இதனையடுத்து விஷூ பண்டிகை, சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நேற்று நடைபெற்றன.

இதனிடையே, கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், தமது மகன் கபீர் முகமது கானுடன் இருமுடி கட்டி, பம்பையில் இருந்து 4 மணிநேரம் மலைப்பகுதியில் நடந்து சென்று சபரிமலை சந்நிதானம் சென்றடைந்தார். சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், ஆரிஃப் முகம்மது கான், பதினெட்டாம் படியேறி, ஐயப்பனை தரிசனம் செய்தார்.