கூட்டுறவு வங்கியில் யார் தவறு செய்தாலும்,கட்சி ஜாதி எந்த வேறுபாடும் இன்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – செல்லூர் ராஜு பேட்டி

Scroll Down To Discover

மதுரை பழங்காநத்தம் பகுதியில் 1.50 கோடி மதிப்பில் மதுரை மாவட்ட கூட்டுறவு துறையின் ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகத்தில் திறந்து வைத்த தமிழக கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசுகையில்,

கூட்டுறவு வங்கிகள் முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் ஆன்லைனில் மாற்றப்படும்,கூட்டுறவு வங்கி மூலம் மகளிர் குழுக்களுக்கு, சிறு வணிகர்களுக்கு கடன் கொடுத்த பட்டு வருகிறது,கூட்டுறவு வங்கி 28 ஆயிரம் கோடியிலிருந்து 58 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடாக பெற்றுள்ளது,அதிக அளவு பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளை நம்புகிறார்கள்,மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் அடகு நகை கடன்கள் வழங்கப்படுகிறது,கூட்டுறவுத்துறையில் எந்தவிதமான தவறும் நடக்கக் கூடாது,தவறு செய்தால் யாரும் தப்பிக்க முடியாது,கட்சி ஜாதி எந்த வேறுபாடின்றி யார் தவறு செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,சமிபத்தில் ஆவினில் நடந்த மிகப்பெரிய முறைகேடு கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,நானாக இருந்தாலும் தவறு செய்தால் தப்பிக்க இயலாது,தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்கு உட்பட்டே செயல்பட்டு வருகிறது,மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை எதிர்த்து இந்தியாவிலேயே நீதிமன்றத்தை நாடிய ஒரே அரசு தமிழக அரசு மட்டும் தான் என்றார்.