குமரி காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல் : மீனவர் அணி தலைவர் மண்டை உடைப்பு.. !

Scroll Down To Discover

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில்  அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது

இதில் எம்.பி. வசந்த குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ் , நிர்வாகிகள் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர். இந்தநிலையில் கூட்டத்தில் எம்.பி.வசந்தகுமாருக்கு எதிராக காங்கிரஸ் மீனவர் அணி மாநிலத் தலைவர் சபின் பேசியதாக கூறப்படுகிறது. அதில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வசந்தகுமார் சீட் வழங்கியதாக சொல்லப்படுகிறது.


இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் மூண்டதில் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக்கொண்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருபிரிவினரையும் விலக்கி அப்புறப்படுத்தினர். இந்த தாக்குதலில் சபின் உள்பட பலரும் காயமடைந்தனர்.