குப்பை மேட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்த நபர் கைது 920 மதுபான பாட்டில்கள் பறிமுதல்..!

Scroll Down To Discover

சுதந்திர தின விழா மற்றும் முழு ஊரடங்கு காரணமாக இன்று மற்றும் நாளை மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளது.இதனால் சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வது மதுரை மாவட்டம் முழுவதும் அதிகரித்து உள்ளது.

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே கல்லுமேடு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மதுபான பாட்டில் விற்பனை செய்வதாக சிலைமான் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சிலைமான் காவல்துறையினர் கல்லுமேடு பகுதியில் சோதனை செய்தனர் அப்போது போஸ்வயது 67 என்பவர் குப்பை மேட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிலைமான் காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில் விற்பனை செய்த போஸ்யை கைது செய்து குப்பைமேட்டில் பதுக்கி வைத்திருந்த 920 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மதிப்பு 1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதே போல் பல இடங்களில் மதுபானங்கள் திருட்டுத்தனமாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளதால் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது