கேரள மாநிலம் கொச்சியின் புறநகர் பகுதியில் குப்பையில் இருந்து தேசிய கொடி மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கொடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேசியக் கொடி மற்றும் கடலோர காவல்படையின் கொடிகள் தவிர, கடலோர காவல்படையின் லைப் ஜாக்கெட்டுகள் மற்றும் ரெயின்கோட்டுகள் ஆகியவையும் இருந்துள்ளன. இதைக் கண்டறிந்த உள்ளூர் மக்கள் ஹில்பேலஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து குப்பையில் இருந்த பொருட்களை மீட்ட போலீசார், தேசிய கவுரவத்தை இழிவுபடுத்துதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டியதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கடலோர காவல்படையினரால் அப்புறப்படுத்த ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
Leave your comments here...