குடியிருக்க வீடு கேட்டு, காலில் விழுந்த மூதாட்டி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மாவட்ட ஆட்சித் தலைவர்.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம், சோழவந்தான், மன்னாடிமங்கலம் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்த கனமழைக்கு வாழைமரங்கள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்திருந்தது. சேதமடைந்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர்,இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மன்னாடிமங்கலம் அருகே கல்லாங்காடு கிராமத்தில், திடீரென மூதாட்டி ஒருவர், மாவட்ட ஆட்சித்தலைவர் காலில் விழுந்து குடியிருக்க வீடு ஒதுக்கித் தரவேண்டும் என, கேட்டுக்கொண்டார். உடனே, அதிகாரிகளை அழைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவருக்கு, வீடு ஒதுக்கி தர உத்தரவிட்டார்.