குடியரசு தினத்தை முன்னிட்டு புதுபட்டு ஆரம்ப அரசு பள்ளியில் நிலவொளி டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட விழா..!

Scroll Down To Discover

73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி டிரஸ்ட் சார்பில் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டு ஊராட்சி கொம்மந்தாங்கள் அரசு ஆரம்ப பள்ளியில் குடியரசு தின விழா நடை பெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜெமிலா அனைவரையும் வரவேற்றார் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணா மூர்த்தி முன்னிலை வகித்தார். நிலவொளி டிரஸ்ட்டின் தலைவர் புனிதவதி தலைமை தாங்கினார். மப்பேடு காவல் நிலைய ஆய்வாளர் எம்.இளங்கோ மரக்கன்றுகளை நட்டார்.தூய்மை பாரதம் இயக்கம் ஒருங்கிணைப்பாளர். வி.எஸ்.இராமன் அவர்கள் கலந்து கொண்டு மன்னராட்சி நடந்த நமது தேசத்தில் ஆங்கிலேயர்கள் எப்படி வணிகம் செய்ய வந்து நாட்டை அடிமை படுத்தினார்கள். இதனால் வெகுண்டெழுந்த தலைவர்கள் எவ்வாறு ஆங்கிலேயர்களை வெளியேற்றினார்கள். நமக்காக சட்டம் இயற்றி நாம் எப்படி வாழ்வேண்டும் என்ற உயரிய சட்ட திட்டங்களை வகுத்து அன்னல் அப்பேத்காரின். தலைமையில் 1950 ல் ஜனவரி 26 ல் குடியாட்சி சட்டம் அமல்படுத்தபட்டது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேச நலனுக்காகவும் சமய ஒற்றுமைக்காகவும் பாடு பட வேண்டும் என பத்திரிகையாளர் வி.எஸ். இராமன் கூறினார்.

இதில் ஊடக உரிமை குரல் தமிழன் வடிவேல் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பேனா தோட்டு புஷ்த்தகங்களை வழங்கி உரையாற்றினார். பத்திரிகையாளர்கள் கா.குரு , பிரஸ் குமார், நடிகை ஸ்ரீ .பாரதி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர்கள் கலந்து கொண்டு ஏழை எழியவர்களுக்கு வேஷ்டி, சேலைகளை வழங்கினார்கள். தொழில் அதிபர்கள் ஆவடி தணா, குமரேசன், மஞ்சுளா வெள்ளைசாமி, பத்திரிகையாளர் பாலாஜி, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ரகுநாதன், வார்டு உறுப்பினர் முருகன், பூபாலன், ஜீவா, நிலவொளி டிரஸ்டின் நிர்வாகிகள் கோபால் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.