கீழடி கண்காட்சியகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி…!

Scroll Down To Discover

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறையும், தமிழக தொல்லியல் துறையும் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டன. அப்போது 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான அடையாளங்கள் கிடைத்தன.

இவற்றை கீழடியிலேயே காட்சிப் படுத்தும் வண்ணம் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ரூபாய் 10 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் அதற்காக ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அகழாய்வில் கிடைத்த பழம்பொருட்களின் கண்காட்சி மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கக் கட்டிடத்தில் தொடங்கியது.


இதல் கிடைத்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொருட்கள் இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் சுடுமண் சிற்பங்கள், மண் பானைகள், ஆயுதங்கள், ஓடுகள், சுதை சிற்பங்கள், சூது பவள மணிகள், விளையாட்டு பொருட்கள், உறை கிணறு, செங்கல் கட்டுமானங்கள், நீர் நிர்வாக வடிகால் அமைப்பு உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளது.

இதில் தற்போது 700 பொருட்களுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.