கீழடி அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை ஆணையர் ஆய்வு..!

Scroll Down To Discover

தமிழக தொல்லியல் துறையின் ஆணையர் உதயச்சந்திரன் கீழடி மற்றும் கொந்தகையயில் நடைபெறும் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை இன்று பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை அகரம் மணலூர் ஆகிய பகுதிகளில் அகழ்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
.

இந்தப் பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் இறுதியில் முடிவடைவததை அடுத்து ,தமிழகத் தொல்லியல் துறையின் ஆணையர் உதயச்சந்திரன் இன்று பார்வையிட்டார்.அவருடன் பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன், ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளின் ஆலோசகர் சேரன், தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


அகழாய்வு கள பொறுப்பாளர்கள் மேற்கண்ட நான்கு இடங்களிலும் நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகள் குறித்து விளக்கமளித்தனர்.முன்னதாக ,கீழடியில் நடைபெறும் கள அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளை உதயச்சந்திரன் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.