கீழடி அகழாய்வில் காதில் அணியும் தங்க வளையம் கண்டுபிடிப்பு.!

Scroll Down To Discover

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் காதில் அணியும் தங்க வளைய ஆபாரணம் கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி, கொந்தகையில் தலா மூன்று குழிகளும், அகரத்தில் ஒரு குழியும் தோண்டப்பட்டன.

இந்நிலையில் கீழடியில் காதில் அணியும் தங்க வளையம் ஆபாரணம் கண்டுபிடிக்கப்பட்டது. 7ம் கட்ட அகழாய்வில் முன் முறையாக தற்போது தங்க ஆபரணம் கிடைத்துள்ளது. இந்த வளையத்தை நீட்டினால் 4.5 செ.மீட்டர் நீளமும், வளையமாக இருந்தால் 1.99 செ.மீ., விட்டமும் உள்ளது. இதன் மூலம் பண்டைய தமிழர்கள் தங்கத்தை பயன்படுத்தியதற்க்கான ஆதாரமாக திகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.