கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம் – தொல்லியல்த்துறை இணை இயக்குனர் தகவல்.!

Scroll Down To Discover

கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம் என தமிழக தொல்லியல்த்துறை இணை இயக்குனர் சிவானந்தம் கூறியிருக்கிறார்.

கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 7 ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசின் தொல்லியல்த்துறை அனுமதி அளித்து உள்ளது.

அகழாய்வு தொடங்கப்படும் தேதியை விரைவில் தமிழக அரசு அறிவிக்கும். 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 6 கட்டங்களாக அகழாய்வு நடைபெற்று உள்ளது. இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் நகர நாகரீகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தங்கப் பொருட்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், முதுமக்கள் தாழி, மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது