கீழடியில் அகழாய்வு நடைபெறும் இடத்தை உயர்நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டார்..!

Scroll Down To Discover

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி கொந்தகை மணலூர் அகரம் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது.

இந்த இடங்களை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் பார்வையிட்டார். நீதிபதி தொல்லியல் துறையிலும் மற்றும் தமிழர்களின் வரலாறு பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் மிக்கவர்.

அவர் கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் பகுதியில் நடைபெறும் அகழாய்வை பார்வையிட்டார்.
கொந்தகையில் நடந்த ஆய்வின் போது கிடைத்த எலும்புக்கூடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகளை பார்த்து பெருமிதம் அடைந்தார்.

நெடுங்கை கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களை பற்றிய முழு விவரங்களை கேட்டறிந்தார். அவருக்கு ஆறாம் கட்ட அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பொருட்களைப் பற்றியும் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் விளக்கிக் கூறினார்.