தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்களை தமிழக முதல்வர் ஈரோடு மாவட்டத்திலிருந்து காணொளி காட்சிமூலம் திறந்துவைத்தார்.
அதன் ஒரு பகுதியாக மதுரை வில்லாபுரத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் புதிதாக 3 மாடியுடன் அமைக்கப்பட்ட கீரைத்துறை காவல்நிலையத்தை தமிழக அரசு 1கோடியே 58லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காட்டியுள்ளது.
இந்த கீரைத்துறை காவல்நிலையத்தை போக்குவரத்து காவல் துணை ஆணையர் சுகுமாரன் மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிக்குமார் அவர்கள் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தனர் . இந்நிகழ்வில் 6 ஆய்வாளர்கள் மற்றும் 12 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் உட்பட 25க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்
Leave your comments here...