கிராம மக்களுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்கிய இந்தியன் ஆயில் நிறுவனம்.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கிராம மக்களுக்கு 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று அர்ப்பணித்தது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில், செயல்பட்டுவரும் இந்தியன் ஆயில் நிறுவனம் கப்பலூர் ஊராட்சிக்குட்பட்ட சொக்கநாதன்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இருப்பதை அறிந்து இந்த நிறுவனத்தின் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை நிறுவி குடிநீரை மக்கள் வீணாக்காமல் இருப்பதற்காக, கார்டு மூலமாக தண்ணீர் பிடிக்கும் இயந்திரத்தை நிறுவி சொக்கநாதன்பட்டி கிராம மக்களுக்கு அர்ப்பணித்தது.

இந்த நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவன மண்டல பொது மேலாளர் ஸ்ரீஹரி நாத் தலைமையில் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மற்றும் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை முறையாக ஒப்பந்தம் போடப்பட்டு, கப்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணனிடம், இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்படுத்தினர்.20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டதற்கு கிராம மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்..