காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டை – பயங்கரவாதி கைது

Scroll Down To Discover

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அதிரடி தேடுதல் வேட்டை நடத்திய பாதுகாப்பு படையினர் கோட்டி டோடா பகுதியை சேர்ந்த நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பயங்கரவாதியை கைது செய்த பாதுகாப்பு படையினர் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், செல்போனை பறிமுதல் செய்தனர்.