காவல் நிலையத்தில் புதிய நூலகம் – மாவட்ட கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்..!

Scroll Down To Discover

காரியாபட்டி காவல் நிலையத்தில், புதிய நூலகம் திறந்து வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் வசதிக்காக நூலகம் அமைக்கப்பட்டது. நூலக திறப்பு விழாவுக்கு, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மனோகர் தலைமை வகித்து, புதிய நூலகத்தை திறந்து வைத்தார். சப்.இன்ஸ்பெக்டர் பா. அசோக் குமார் வரவேற்றார். விழாவில், காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை மாவட்ட எஸ்.பி.மனோகர் நட்டுவைத்தார்.

இந்த விழாவில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி சகாயஜோஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேரூராட்சித்தலைவர் செந்தில், திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட க்கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், கவுன்சிலர் முகமது முஸ்தபா, மனு நூல்நிலைய நிறுவனர் பரதன் எஸ்.பி.எம்.டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, சுரபி டிரஸ்ட் நிறுவனர் விக்டர், ஜனசக்தி பவுண்டேசன் சிவக்குமார், பசுமை பாரதம் அறக்கட்டளை நிறுவனர்.பொன்ராம், மனித பாதுகாப்பு கழக நிர்வாகிகள் மனோகரன், பிரின்ஸ், இராமகிருஷ்ண நிர்வாகிகள், மூவேந்திரன், செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர். சப்.இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி நன்றி கூறினார்.